Thursday, July 17, 2008

பலரில் ஒருவன்


போகும் இடம் எங்கும் என்னை மட்டும் சுவாசிக்கும்
என் காதலனுக்கு
நான் செலுத்திய மரியாதையை
அவனை விட அழகான ஒருவனை சந்தித்தது

Friday, April 25, 2008

உன்னால் உறக்கம் இல்லாத நான்

காலையில் மலர்ந்த பூக்கள் மாலையில் வாடுவது போல்

உறக்கத்தை தேடும் என்கண்களுக்கு உன் சிரிப்பை தந்துவிடு


மறுநாள் உன் கூந்தளுக்காக அது மலர்ந்திருக்க வேண்டுமென்றால்

தனிமையில் நான்

காலை கதிரவனின் கதிரொளி என்னை தளுவும்முன் என் கை குழந்தை உன் வாழ்த்துக்களாள் சிணுங்க வேண்டும்

கதிரவன் மறையும் முன் உலகிற்கு ஒலி கொடுக்கும் சந்திரன் போல்தனிமையில் இருக்கும்போது தோள்கொடுக்கும் ஒரு நண்பனாய் நீ வேண்டும்

புவியீர்ப்பு விசை என்னை தாங்குவது போல்சஞ்சலப்படும்போது உன் கண்ணின் விசை என்னை தாங்கவேண்டும்

ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரத்தை போல்அனுதினமும் என்னை பற்றியோசிக்கும் ஒருத்தியாய் நீ வேண்டும்

ஓயாமல் "mouse"இ பிடித்து கொண்டிருக்கும் என் கைகளுக்குபதுமையாய் உன் கைகோர்த்து, ஓயாத கடல் அலையை ரசிக்க வேண்டும்

கவலை படாதே இவை எல்லாம்என்னால்
முடிந்ததால் தன் உன்னிடம் கேட்கிறேன்

Wednesday, March 26, 2008

காயப்பட காத்திருக்கும் இதயம்


என் இதயத்தை சுற்றி சுவர் எழுப்பினேன் கயப்படமலிருக்க அல்ல
அதை தகர்க்க முயற்சி எடுக்கும்
ஒருத்தியை சந்திக்க

Tuesday, March 25, 2008

காதலியின் கண்ணீர்


ஏனோ எப்பொழுதும் உன் நினைவுகள் என்னும் மழையில் நனைந்துகொண்டே இருக்கிறேன்,பார்த்த இடத்தில் எல்லாம் நீயே தொன்ருகிராய்,நீ இல்லாத ஒவ்வொரு நொடியும் கண்கில் கண்ணீர் வெள்ளம் பெருகி கொண்டே போகிறது, ஏன், இதை கூட நான் எழுதவில்லை ஏன் கண்ணீர் துளிகள்தான் எழுதியது

யார் செய்த தவறு


கண்ணை மூடிக்கொண்டு பேசினேன் உன் கண்களை பார்த்தால் காதலில் விழுந்துவிடுவேனோ என்று அச்சத்தில் அப்போதும் விழுந்துவிட்டேன் உன் குரலில்

மன்னிக்க முடியாத ஒருத்தி

என் கைரேகையை தேய்த்த உன்னை
எரிய முற்பட்டேன்
நீ தேய்த்து என் காதல்ரேகை வளர்ப்பதற்கு
என்பது தெரியாமல்
அந்த நன்றிக்காக காலம் முழுவதும் என் கைகள் உன்னேயே தளுவிக்கொண்டிருக்கும்

காதலில் விழுந்த நான்


பிழை இன்றி தமிழில் கட்டுரை எழுத தெரியாத என்னை
உன் கண்களால் கவிதைகலை கிறுக்க வைத்துவிட்டயே
இது தமிழுக்கு கிடைத்த வரமா இல்லை என்னக்கு கிடைத்த சாபமா
***************
உன் கண்களை பார்த்த பிறகுதான் தெரிந்தது
நான் எவ்வளவு கோழை என்பது

அன்னையின் அரவணைப்பு




அவசரப்பட்டு விட்டேன் இரண்டு கால்களில் நடக்க பழகி

Monday, March 24, 2008

உனக்கு ஒரு சவால்


உன்னிடம் இல்லாத ஒன்று என் காதலியின் பெயர்

முகம் தெரியாத என் காதலிக்கு சமர்பனம்

என் உடலில் உள்ள மற்றஉடல் பாகங்கள் எல்லாம் புலம்புகின்றன
அதிஷ்டம் இதயத்துக்கு மட்டும் எப்படி கிடைத்தது ?
***********************
வருத்தம் இல்லையடி கல்லறையில்லாவது நிம்மதியாய் உறங்குவேன்
பிறவி பயனை அடைந்த திருப்தியில்
***********************
தினம் ஒரு முறையேனும் இதயதிடம் புன்னகையிடு அது காலம் முழுவதும் உன்னகாக துடித்துக்கொண்டிருக்கும்
***********************
இது வரை எனக்காக துடித்த என் இதயம்
இனி உனக்காக துடிக்கும்